பொது செய்தி

தமிழ்நாடு

சமூக விலகலே கொரோனாவை ஒழிக்கும் ஒரே வழி பொதுநல மருத்துவர் டாக்டர் சிதம்பரம் 'அட்வைஸ்'

Added : மார் 24, 2020
Share
Advertisement
சமூக விலகலே கொரோனாவை ஒழிக்கும் ஒரே வழி பொதுநல மருத்துவர் டாக்டர் சிதம்பரம் 'அட்வைஸ்'

மதுரை :''கொரோனா உயிர்க்கொல்லி வைரஸை ஒழிக்கும் ஒரே வழி சமூக விலகலே' என மதுரை பொதுநல மருத்துவ நிபுணர் டாக்டர் பி.சிதம்பரம் கூறினார்.மருத்துவத்துறையில் 57 ஆண்டு அனுபவம் பெற்றவர் டாக்டர் சிதம்பரம் 82. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து கூறியதாவது:உலகம் தோன்றியது முதல் உயிர்க்கொல்லி நோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகள்உள்ளன.பறவை, கொசு, எலிகள் மூலம் வைரஸ் நோய் பரவியபோது மனிதர்கள் கொத்துக்கொத்தாக பலியாகினர். முதல் முறையாக மனிதன் மூலம் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.கொரோனா வைரஸ் 25 டிகிரி வெப்பநிலையில் உயிர்வாழும் தன்மையுடையது. எனவே, சம வெப்ப நாடுகளான சீனா, ஈரான், தாய்லாந்து, இத்தாலி உள்ளிட்டநாடுகளில் வேகமாகபரவியது.கொரோனா வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கவில்லை. புதிய நோயை குணமாக்கும் தன்மை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சில மருந்துகளுக்கு இருக்கிறதா என ஆராய்வது வழக்கம்.
அந்த வகையில் கொரோனாவுக்கு ஹைட்ரோ குளோரோகுவின், அசிட்ரால் போன்ற நோய்எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.இது கொரோனா வைரஸை கொல்லும் என அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்போது அது வைரஸை அழிக்க வாய்ப்புள்ளது.இதற்காக 'நொதித்தல்' உணவுகளான தயிர், பழைய சாதம், இட்லி உள்ளிட்டவை ஏற்றவை. இந்த உணவு உண்பது ஒரு கிலோ இறைச்சியில் கிடைக்கும் சத்துகளுக்கு இணையானது.இருப்பினும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஒரே வழி சமூக விலகலே. ஒவ்வொருவரும் தனித்திருக்கவேண்டும். இதைதவிர்த்து வேறு பாதுகாப்பு வழிகள் தற்போதையசூழ்நிலையில் இல்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X