சீனாவில் பரவும் புது வைரஸ் :எலி காய்ச்சலுக்கு ஒருவர் பலி

Added : மார் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

பீஜிங்,:நம் அண்டை நாடான சீனாவில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 'ஹன்டா' வைரஸ் எனப்படும் எலி காய்ச்சலுக்கு, ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பீதி ஏற்பட்டு உள்ளது.சீனாவில் முதன் முதலாக தென்பட்ட, கொரோனா வைரஸ், தற்போது உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில், இந்த வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது.இந்த நிலையில், யுனான் மாகாணத்தில் இருந்து ஷான்டாங்க் மாகாணத்துக்கு, பஸ்சில் சென்ற ஒருவர், திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு, ஹன்டாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வைரஸ், எலிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவக் கூடியது.அவருடன் பஸ்சில் பயணம் செய்த, மேலும், 32 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் முடிவுகள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிதாக, ஹன்டா வைரஸ் தோன்றியுள்ளது, சீன மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-மார்-202011:18:35 IST Report Abuse
அசோகா சப்பமூக்கனால உலகத்தில் யாரு3 நிம்மதி இல்லை, ஒன்னு மாத்தி ஒன்னு
Rate this:
Cancel
25-மார்-202008:48:08 IST Report Abuse
S B. RAVICHANDRAN ஏன்டா சப்பமூக்கா உனக்கு வைரஸ் தயாரிக்க மட்டுமே தெரியுமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X