பொது செய்தி

தமிழ்நாடு

கையுறை, முகக்கவசம் வழங்காததால் அச்சத்தில் மருத்துவமனை பணியாளர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் போதுமான அளவுமுகக்கவசம், கையுறை வழங்காததால் அச்சத்தில்பணியாளர்கள் உள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்துஅரசு மருத்துவமனைகளில் கொரோனா அறிகுறியில் இருப்பவர்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு உடல்பரிசோதனை செய்ய சிறப்பு வார்டுகள்அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்குவெளி நாடுகளில் இருந்து வருபவர்களை விமானநிலையத்தில் பரிசோதனை செய்து அனுப்பப்படுகின்றனர்.

அவர்களுக்கு வீட்டிலேயேசுகாதாரத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கொரோனா அறிகுறியால்வெளி நாட்டில் இருந்து வந்த பெண் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ்கள், மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்குமுகக்கவசம், கையுறை, கைகளை கழுவ கிரிமி நாசினிபோன்றவைகள் வழங்கப்படவில்லை.

நோயாளிகளுக்குசிகிச்சையளிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். அதனையும் மீறித்தான் டாக்டர்கள், பணியாளர்கள் கொரோனாகண்காணிப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றனர். நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய கையுறை, முக கவசம், கிரிமி நாசினிகள்வழங்கப்படுவதில்லை, என புகார் தெரிவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துஉரிய கையுறை, முக கவசம், கிரிமி நாசினி வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X