பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு பேனர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய், மக்களிடம் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர்புறங்களில் ஆட்டோக்கள் மூலம் பிரசாரமும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் பஸ் நிறுத்தம், கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

அதில் கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம், அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கைகளை கழுவும் முறை, அவசர உதவி எண் உட்பட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X