பொது செய்தி

தமிழ்நாடு

சோமண்டார்குடி கோமுகி ஆற்றில் தடுப்பணை புனரமைப்பு பணி தீவிரம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : சோமண்டார்குடி கோமுகிஆற்றில் உள்ள தடுப்பணை 85 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி (561 மில்லியன் கன அடி) ஆகும். இதில், 44 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.பருவ மழைக் காலங்களில் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் போது அணையின் பாதுகாப்பு கருதி ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அந்த தருணத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோமுகி ஆற்றில் உள்ள 11தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தோடும்.தடுப்பணைகளிலிருந்து சுற்று வட்டார பகுதிகளிலுள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு வடக்கிழக்கு பருவ மழையின் போது அணையிலிருந்து 4000 கன அடிக்கு மேல் ஆறு வழியாக தண்ணீரை வெளியேற்றியபோது அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தோடியது.அப்போது, கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடியில் உள்ள தடுப்பணையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஏமப்பேர், தச்சூர், விளம்பார், மலைக்கோட்டாலம், பொற்படாக்குறிச்சி உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படுவது பாதிக்கப்பட்டது.தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பினை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையொட்டி, முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு கடந்தாண்டு ஜூலை மாதம் 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியது.தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இடிபாடுகள் முழுவதும் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய கான்கிரீட் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X