பொது செய்தி

தமிழ்நாடு

144 தடை உத்தரவுக்கு ஒத்துழைப்பு பொதுமக்களுக்கு வேண்டுகோள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டுமென போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின்படி, கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய உட்கோட்டங்களில் போலீசார் ஆட்டோ மூலமாக 'கொரோனா' நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, முகக் கவசம் அணிய வேண்டும். வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்லும் போது, கை, கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். குறிப்பிட்ட துாரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

'கொரோனா' நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழக அரசால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடைகள் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பொருட்கள் வாங்க வெளியில் கூட்டமாக வருவதை தவிர்க்க வேணடும். தனிநபராக சென்று தேவையான பொருட்களை வாங்க வேண்டும். இளைஞர்கள் நண்பர்களோடு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு இடத்தில் 2க்கும் மேற்பட்டோர் கூடக் கூடாது.

தடை உத்தரவை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டு குடும்பத்துடன் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். 'கொரோனா' நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X