பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: பரமக்குடி வீடுகளில் ஸ்டிக்கர்

Added : மார் 24, 2020
Share
Advertisement

பரமக்குடி : உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பரமக்குடிக்கு வந்துள்ள வெளி நாட்ட்டில் வேலை செய்பவர்களின் வீடுகளின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

பரமக்குடியில் வருவாய், சுகாதாரம், நகராட்சி நிர்வாகம் மற்றும்போலீஸ் சார்பில் நகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். மேலும் அரசு உத்தரவின் படி, அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் அடைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.காய்கறி, மளிகை, ஓட்டல்கள், மருந்து கடைகள் திறந்திருக்கும்என அரசு அறிவித்தாலும், நேற்று காலை முதல் அனைத்துகடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்து. இதனை பயன்படுத்தி சில வியாபாரிகள் பொருட்களின் விலையை பல மடங்கு அதிகரித்து விற்றனர்.

இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தாலும், வேறு வழியின்றி வாங்கிச் சென்றனர். பரமக்குடி டி.எஸ்.பி., சங்கர் தலைமையில் போலீசார் நகர் முழுவதும் ரோந்து சுற்றி வருகின்றனர். முக கவசம், கிரிமி நாசினிகள் பற்றாக்குறை ஏற்பட்டது.நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் கூறியதாவது:பரமக்குடிக்கு வந்துள்ள வெளிநாட்டு வாசிகள் 13 பேரை கண்டறிந்து அவர்கள் வீடுகளின் முன்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு தொடர்ந்து, அவர்களை 28 நாட்கள் வெளியில் வர வேண்டாம், என அறிவுறுத்தியுள்ளோம்.

அவர்கள் வசிக்கும் வீட்டைச் சுற்றிலும், மற்றும் நகர் முழுவதும் மக்கள் அதிகம கூடும் இடம், அரசு அலுவலகம் என அனைத்து பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடர், கிரிமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வராமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X