500ஐ கடந்தது 'கொரோனா' நாடு முழுதும் 10 பேர் பலி

Added : மார் 24, 2020
Share
Advertisement

புதுடில்லி,:நாடு முழுதும் 519 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மஹாராஷ்டிராவின் புனேவில் மூவருக்கும் சதாரா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து சமீபத்தில் குஜராத் வந்த 65 வயது நபருக்கு காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து 20ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதையடுத்து நாடு முழுதும் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.புனேவில் 41 வயதான அங்கன்வாடி ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான மூச்சு திணறல் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இவரது கணவர் மகன் சகோதரி அவரது கணவர் மற்றும் மகள் உள்ளிட்ட ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.எண்ணிக்கை உயர்வுபாதிக்கப்பட்ட அங்கன்வாடி ஊழியர் கடந்த 7 மற்றும் 8ல் அங்கன்வாடி கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து இவருடன் நேரடி தொடர்பில் இருந்த 87 பேர் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் மூவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் மேற்காசிய நாடான எகிப்தில் இருந்து மேற்கு வங்கம் வந்த இருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது.பிரிட்டனில் இருந்து வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் திரும்பிய 23 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இது இம்மாநிலத்தின் முதல் கொரோனா பாதிப்பாகும்.கொரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா திரும்பிய மூவருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து தெலுங்கானாவின் தொற்று எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது. கர்நாடகாவில் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.கேரளாவில் 105; ராஜஸ்தான் உ.பி.யில் தலா 33; தமிழகத்தில் 15; டில்லியில் 31; பஞ்சாபில் 29; லடாக்கில் 13; ஹரியானாவில் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.வணங்குகிறேன்நாடு முழுதும் அமல்படுத்தி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:நாடு முழுதும் 1.88 லட்சம் பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 28 நாட்கள் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளனர்.மக்கள் அனைவரும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு புழங்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும்.முதியோர் கர்ப்பிணிகள் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தங்கள் உயிரை பணயம் வைத்து பரிசோதனை கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்களை வணங்குகிறேன்.கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களின் கடின உழைப்புக்கும் பாராட்டுகள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X