சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார் உழவர் சந்தை மூடல் சாலையோர கடைகள் அகற்றம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கடலுார் : 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடலுார் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

'கொரோனா' நோயை கட்டுப்படுத்த கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த உத்தரவு நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு மாநில அரசு தளர்த்தியது.வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின. பொது மக்கள் வெளியில் சென்று வந்தனர். குறைந்தளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையே, இந்நோயின் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

இதன் எதிரொலியாக கடலுார் உழவர் சந்தை நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது.இதனால், ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், பழங்கள், வாழை இலைகள், வாழைத் தார்களை சந்தை வெளியே நேற்று காலை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனை செய்தனர். காய்கறிகள், பழங்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில், கடைகளை போலீசார் அப்புறப் படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X