பொது செய்தி

தமிழ்நாடு

நெய்வேலியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

நெய்வேலி : என்.எல்.சி., மனிதவளத்துறை உள்ளிட்ட அனைத்து துறையின் சார்பில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; என்.எல்.சி., சேர்மன் ராக்கேஷ் குமார் மற்றும் இயக்குநர்கள் விக்ரமன், நாதெள்ள நாக மகேஷ்வர் ராவ், பிரபாகர் சௌக்கி, ஜெய்குமார் ஸ்ரீனிவாசன், ஒற்றாடல்துறையின் முதன்மை கண்காணிப்புத்துறை அதிகாரி வெங்கடசுப்ரமணியன், மற்றும் டாக்டர்கள் அடங்கிய ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது நாள்தோறும் காலை 09.30 மணிக்கு கூடி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் என்.எல்.சி.,மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அவசர நிலையைக் கையாள்வதற்காக 73 படுக்கைகள் அடங்கிய 3 சிறப்பு வார்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. நோய் அறிகுறி உடையவர்களை மருத்துவமனைக்கு வெளியே தனிமைப்படுத்துவதற்காக 40 அறைகள் அடங்கிய மையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை தொடக்க நிலையில் பரிசோதனை செய்ய மருத்துவமனையின் நுழைவுப்பகுதியில் பிரத்தியேகமாக ஒரு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை: என்.எல்.சி., நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கைக்கு கட்டுபாட்டு அறை ஏற்படுத்தியுள்ளது. இதில் 70795 என்ற எண்ணிலும், 04142-252664 என்ற பி.எஸ்.என்.எல்., எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். covid19@nlcindia,in என்ற இ.மெயிலிலும், 8903182501 என்ற எண்ணில் எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X