தமிழ்நாடு

குறுகிய ரோட்டில் தடுப்பு சுவர்... இது தேவைதானா!

Added : மார் 24, 2020
Share
Advertisement

அருப்புக்கோட்டை : குறுகிய ரோட்டில் தடுப்பு சுவர் அமைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் குறுகிய அளவில் தான் ரோடுகள் உள்ளன. ரோடுகள் அகலமாக இருந்தாலும் அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அந்தந்த பகுதி கடைக்காரர்கள் ரோடு வரை தங்கள் கடைகளை நீட்டித்து வைத்துள்ளனர். கடைகள் முன்பு 'சன்ேஷடுகள்' வேறு வைத்துள்ளனர். இவற்றை எல்லாம் நெடுஞ்சாலை துறையினர் அகற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை.

உள்ளாட்சி தேர்தல் பின்பு தற்போது பெரும்பாலான ஊர்களில் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரோட்டை அகலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு தான் ரோட்டின் மையப்பகுதியில் தடுப்பு சுவர் ஏற்படுத்த வேண்டும். ஆனால் ரோட்டை அகலப்படுத்தாமல் தடுப்பு சுவர் ஏற்படுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகள் தடுப்பு சுவர் மீது முட்ட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு, பாலையம்பட்டி ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் ரோட்டை அகலப்படுத்தாமல் தடுப்புசுவர் கட்டியதால் விபத்து அபாயம் உள்ளது. இதுபோன்று பந்தல்குடி ரோட்டிலும் தடுப்பு சுவர் கட்டப்பட உள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இவற்றை எல்லாம் அகற்றி ரோடு அமைத்து தடுப்பு சுவர் ஏற்படுத்த நெடுஞ்சாலை துறை முன் வர வேண்டும்.


விபத்துக்குதான் வழிவகுக்கும்


நகரில் குறுகிய ரோடுகளில் தடுப்பு சுவர் கட்டுவதால் வாகன நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளது. ரோட்டை நன்கு விரிவுபடுத்தி வாகனங்கள் வந்து செல்ல வசதியாக செய்து விட்டு தடுப்பு சுவர் கட்டலாம்.இதோடு குறுகிய ரோடுகளில் தடுப்பு சுவர் என்பது தேவை இல்லாதது.-
- பாலமுருகன், தனியார் ஊழியர்,அருப்புக்கோட்டை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X