பொது செய்தி

தமிழ்நாடு

'ஜெட்ராடிங்' இயந்திர லாரி வாங்க மாநகராட்சி முடிவு

Added : மார் 24, 2020
Share
Advertisement

சென்னை;சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கிருமிநாசினி தெளிப்பதற்காக, ஜெட்ராடிங் இயந்திர லாரிகள் வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 15 மண்டலங்களிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சாலைகள், தெருக்கள் மட்டுமின்றி, வங்கிகள், ஏ.டி.எம்., மையங்கள் என, அனைத்து பகுதிகளிலும், கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள ஜெட்ராடிங் இயந்திர லாரியை பயன்படுத்தி, ஊழியர்களால் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காணும் விதமாக, ஜெட்ராடிங் இயந்திர லாரிகள் வாங்க, மாநகராட்சி கமிஷனர் முடிவு செய்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:கூடுதலாக ஜெட்ராடிங் இயந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும், 25 - 30 ஜெட்ராடிங் இயந்திரம் கைவசம் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதுமட்டுமின்றி ஊழியர்கள் தோளில் மாட்டிக்கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரமும் கூடுதலாக, 200 வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X