சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடை உத்தரவை மீறினால் சிறை ; கலெக்டர் அன்புச்செல்வன் எச்சரிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

கடலுார் : தடை உத்தரவை மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் அன்புச்செல்வன் எச்சரித்துள்ளார்.

கடலுார் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இன்று (நேற்று) மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி காலை 6 வரை நடைமுறையில் இருக்கும். பொது இடங்களில் 5 நபருக்கு மேல் கூடக்கூடாது. பொது மக்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பொது வினியோகக் கடைகள், பெட்ரோல், காஸ், பால், டீக்கடைகள் திறந்திருக்கும். அமரர் ஊர்தி செயல்பட தடையில்லை.தடை உத்தரவை மதிக்காமல் நடந்தால் ஒரு மாதம் சிறை, கொரோனா நோயை பரவும் வகையில் அசட்டையாக இருந்தால் 6 மாதம் சிறை, பரவ செய்யக்கூடிய கொடூரமான செயலில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். கடலுார் மாவட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள 521 நபர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி, கண்காணிப்பில் உள்ளனர்.

அவரது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அழியாத மைய கொண்ட புறங்கையில் சீல் போடப்பட்டிருக்கும். அவர்களை சுகாதார துறை மூலம் தினசரி காலை மாலை பரிசோதனை செய்து வருகிறோம். மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் தலா 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல், அண்டை மாவட்டத்தில் இருந்து வந்துள்ள 940 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

ஆதரவற்றோர் தெருவோரங்களில் இருப்பவர்களுக்கு உணவு வழங்க சமுதாய உணவு கூடங்கள் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும். அவசியம் இல்லாத பட்சத்தில் பொது மக்கள் மருத்துவமனைக்கு வரவேண்டாம். வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறிகள்,மளிகை பொருட்கள் வெளி மாநிலத்தில் இருந்து வருவதற்கு தடையில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X