பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் மூடல்; பிளாக்கில் விற்க திட்டம்; அவசியமாகிறது விருதுநகர் எஸ்.பி., நடவடிக்கை

Added : மார் 24, 2020
Share
Advertisement

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பிளாக்கில் சரக்கு விற்பனை நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மீது எஸ்.பி., தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நேற்று மாலை 6:00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் டாஸ்மாக் கடைகளும் மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளது. பொதுவாக டாஸ்மாக் கடைகள் பகல் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இயங்கும். ஆனால் விருதுநகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் இரவு 9.50 மணிக்கே மூடப்படுகின்றன.

அதன்பின் டாஸ்மாக் கடைகள் அருகே மற்றும் பார்களில் இரவு 10:00 மணி முதல் அடுத்த நாள் பகல் 12:00 மணி வரை மதுப்பாட்டில்கள் தாராளமாக கிடைக்கும். ஒரு குவாட்டர் பாட்டில் ரூ.40 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 மதுப்பாட்டில் பெட்டிகள் தனியாக ஒதுக்கப்பட்டு இரவு 10:00 மணிக்கு மேல் விற்பனை தொடங்குகிறது.

அதன்பின் விடிய, விடிய விற்பனை ஜோராக நடக்கும். ஒரு குவாட்டருக்கு ரூ.40 ஒரு புல் ரூ.160 வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். பிளாக்கில் மது விற்பனை செய்து பார் உரிமையாளர்கள் கொள்ளை லாபம் பார்ப்பார்கள். இதற்கு அந்தந்த பகுதி போலீசாரும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் எப்படியாவது குடித்தே தீர வேண்டும் என அங்குமிங்கும் அலைவார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்து பெரிய அளவில பணம் பார்ப்பதற்கான பலே திட்டம் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ளது.

இதன் மீது எஸ்.பி., தீவர நடவடிக்கை எடுத்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.இதோடு இதற்கு துணைபோகும் குறிப்பிட்ட போலீசார் மீது நடவடிக்கை அவசியமாகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.நடவடிக்கை உண்டுமாவட்டம் முழுவதும் முறையான கண்காணிப்பு இருக்கும். பிளாக்கில் சரக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிந்தால் மக்கள் போலீஸ் எண் 100 க்கு அழைத்து தாராளமாக புகார் தெரிவிக்கலாம். போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கையை எடுப்பார்கள்.- -பெருமாள், எஸ்.பி., விருதுநகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X