பொது செய்தி

தமிழ்நாடு

பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது 31 வரை நிறுத்தம்

Added : மார் 24, 2020
Share
Advertisement

குரோம்பேட்டை:'கொரோனா' பரவலை தடுக்கும் விதமாக, உள்ளாட்சி அமைப்புகளில், மார்ச், 31ம் தேதி வரை, பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு பல்வேறு விதிமுறைகளை அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை, 6:00 மணியில் இருந்து, மார்ச், 31ம் தேதி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளில், தடுப்பு நடவடிக்கை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
வீடுகளில் கிருமி நாசினி தெளிப்பு, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல கண்ட நபர்கள் குறித்து கண்டறிந்து, அரசுக்கு தெரிவித்தல், வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிப்பு போன்ற பணிகளில், சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாகவும், தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், உள்ளாட்சிகளில், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பணி, மார்ச், 31 வரை நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X