பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டுகோள்

Added : மார் 24, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்களது தகவல்களை தெரிவிக்காமல் இருந்தால் கடும் நடவடிக்கை பாயும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் கிரண் குராலா செய்திக்குறிப்பு:வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் அந்தந்த விமான நிலையங்களில் தங்களது விவரங்களை பதிவு செய்து சுய தனிமைபடுத்தி கொண்டுள்ளனர். விமான நிலையங்களில் தங்களது விவரங்களை பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள் யாரேனும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்தால் தங்களது முழு விபரங்களை கொரோனா தடுப்பு அவசர கட்டுப்பாட்டு அறையின் 24 மணி நேர தொலைபேசி எண்ணிற்கு 04151 - 220000 தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகத்திடமும், சுகாதார துறையினரிடமும் தாமாகவே முன்வந்து தெரிவிக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 61 மற்றும் 62ன் படியும், இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 269ன் படியும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும். எனவே, பொதுமக்கள் அனைவரும் பொது சுகாதாரத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X