சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் திரும்பிய இடுக்கி தோட்ட தொழிலாளர்கள்

Added : மார் 24, 2020
Share
Advertisement
தமிழகம் திரும்பிய இடுக்கி தோட்ட தொழிலாளர்கள்

கூடலுார், :இடுக்கி மாவட்டத்தில் தங்கி தோட்ட வேலை செய்த ஏராளமான தமிழர்கள், 144 தடை உத்தரவால் நேற்று தமிழகப்பகுதிக்கு வந்தனர்.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் தேனி மாவட்டம் கூடலுார், கம்பம், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி தோட்ட வேலை செய்து வருகின்றனர். மேலும் அங்கு ஏலத்தோட்டங்களை சொந்தமாகவோ, ஒத்திக்கு பார்க்கும் தமிழக விவசாயிகளும் அதிகம்.இடுக்கி மாவட்டத்தில் 'கொரோனா' அறிகுறி காரணமாக எல்லையை மூட அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு நேற்று மாலை 6:00 மணி முதல் அமல்படுத்தப்பட்டதால் கடந்த 2 நாட்களாக இடுக்கி மாவட்டத்தில் தங்கியிருந்த தமிழக தொழிலாளர்கள் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக மினிலாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தமிழகப்பகுதிக்கு வந்தனர். குமுளியில் தமிழக சுகாதாரத்துறையினர், போலீசார் தொழிலாளர்களின் பெயர் மற்றும் முகவரியை பெற்று காய்ச்சல் பரிசோதனை செய்தபின் சொந்த ஊர் செல்ல அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X