சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல்லாவரம் நகராட்சியில் 22 வீடுகளுக்கு ‛நோட்டீஸ்'

Added : மார் 24, 2020
Share
Advertisement

குரோம்பேட்டை:பல்லாவரத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும், 22 வீடுகளில், எச்சரிக்கை, 'நோட்டீஸ்' ஒட்டும் பணியில், நகராட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில், 'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு பல்வேறு விதிமுறைகளை அறிவித்து, அரசாணை வெளியிட்டு உள்ளது. நேற்று மாலை, 6:00 மணியில் இருந்து, 31ம் தேதி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.சென்னையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும், 3,000 வீடுகள், தனிமைப்படுத்தப்பட்டு, வெளியாட்கள் வருவதை தடுக்கும் வகையில், 'நோட்டீஸ்' ஒட்டும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், பல்லாவரம் நகராட்சியில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்கியிருக்கும், 22 வீடுகளை கண்டறிந்து, அது சம்பந்தமான பட்டியலை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், நகராட்சிக்கு அனுப்பிஉள்ளது. அந்த பட்டியலை வைத்து, சம்பந்தப்பட்ட வீடுகளை கண்டறிந்து, எச்சரிக்கை, 'நோட்டீஸ்' ஒட்டும் பணியில், நகராட்சியினர் இறங்கிஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X