கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'டோல்கேட்'களில் கட்டணம் தடை கோரி முறையீடு உயர்நீதிமன்றம் கருத்து

Added : மார் 25, 2020
Share
Advertisement

மதுரை, 'கொரோனா'பாதிப்பை தடுக்க நான்குவழிச்சாலை டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள், 'இதில் என்.எச்.ஏ.ஐ., நிர்வாகம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்,' என, கருத்து தெரிவித்தனர்.உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) தரப்பு வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி முறையிட்டதாவது: 'கொரோனா' பாதிப்பை தடுக்க, தமிழகத்தில் மார்ச் 24 மாலை 6:00 மணி முதல் 144 தடையுத்தரவை அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் பாதுகாப்பிற்காக வெளியூர்களிலிருந்து பலர் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் செல்கின்றனர். நான்குவழிச் சாலை டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 'டோல்கேட்' வசூல் மையங்களில் அதிக நேரம் வாகனங்கள் நின்று, கடந்து செல்ல வேண்டியுள்ளது.அதிகம் பேர் ஒரே இடத்தில் கூடினால் 'கொரோனா' வைரஸ் உட்பட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. நான் திருச்சியிலிருந்து மதுரை வர, ஒவ்வொரு டோல்கேட்டையும் கடக்க 45 நிமிடங்கள் ஆனது. டோல்கேட்டுகளில் அதிகம் பேர் கூடுவதைத் தடுக்க, மக்களை பாதுகாக்க ஒரு வாரத்திற்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்கும் வகையில் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு ராஜகோபால் தெரிவித்தார்.நீதிபதிகள், 'இவ்விவகாரத்தில் என்.எச்.ஏ.ஐ., நிர்வாகம்தான் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்,' என, கருத்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X