சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம் நான்கு பேர் மீது வழக்கு

Added : மார் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

நாகர்கோவில், நாகர்கோவில் அருகே வெள்ளச்சந்தையை சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்த பின் ஒரு கடையிலும் வேலை பார்க்கிறார். கடையில் பார்வதிபுரம் மேலப்பெருவிளையை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டு, மேலப்பெருவிளையில் ஒரு பாழடைந்த வீட்டில் இருவரும் தனிமையில் அடிக்கடி இருந்துள்ளனர்.மக்கள் ஊரடங்கு அன்று இதுபோல பாழடைந்த வீட்டுக்கு சென்ற போது காதலன் மேலும் மூன்று நண்பர்களை அழைத்து வந்து அவர்களுடனும் உல்லாசமாக இருக்கும் படி கூறியுள்ளார். சிறுமி மறுப்பு தெரிவித்ததால் கால்களை கட்டி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். கட்டு அவிழ்ந்ததால் சிறுமி தப்பி மெயின் ரோட்டுக்கு வந்தார். அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் ஆசாரிப்பள்ளம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இருங்கடா - Kitchener,கனடா
25-மார்-202019:12:54 IST Report Abuse
இருங்கடா இவள் சிறுமியல்ல...வெம்பிய பழம்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
25-மார்-202013:13:48 IST Report Abuse
RajanRajan இதற்கு பெயர் காதல் அல்ல காம வெறி. இப்படி அவன் கூப்பிட்டான் போக வேண்டியது அவன் அதை ஊர் பூரா சொல்லி கூத்து பண்ண வேண்டியது. அப்புறமா பாலியல் வன் கொடுமை என விட்டு ஆத்த வேண்டியது. எல்லாம் வயசுக்கு மீறிய செயல்பாடுகளும் அதன் அவலங்களும் தான் மிச்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X