தமிழ்நாடு

மறுப்பு! கடலுார் அரசு மருத்துவமனையில் கட்டுப்பாடுகள் விதிப்பு... புறநோயாளிகளுக்கு அனுமதி

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020
Share
Advertisement
மறுப்பு!  கடலுார் அரசு மருத்துவமனையில் கட்டுப்பாடுகள் விதிப்பு... புறநோயாளிகளுக்கு அனுமதி

கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனையில் 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 'கொரோனா' நோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 'கொரோனா' அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்டம் வாரியாக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர் காய்ச்சல், சளி, இருமல் காரணமாக நேற்று முன்தினம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரும், கேரளாவிலிருந்து வந்த காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர் காய்ச்சல், சளி ஏற்பட்டதால் கடலுார் அரசு மருத்துவமனையில் நேற்று தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்.

இவரின் ரத்த மாதிரி பரிசோதனைகள் முடிவுகள் வந்த பின்னரே பாதிப்பு உள்ளதா என கண்டுபிடிக்க முடியும் என மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார்.கட்டுப்பாடுகள் விதிப்பு கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

அதிகமான பார்வையாளர்கள் உள்ளே நுழைய வேண்டாம் என வலியுறுத்தி நுழைவு வாயிலில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. புற நோயாளிகள் பிரிவில் வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்பட்டது. 9:00 மணிக்கு மேல் புற நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நோயாளிகளை பார்க்க நேற்று, பார்வையாளர்கள் சிலர் அதிகளவில் வந்தனர்.

இவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை.இதனால், போலீசாரிடம் பார்வையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்து, வெளியே அனுப்பினர். இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் அரசு மருத்துவமனையில் சிறு சிறு உடல் நலம் பாதிப்பிற்கு சிகிச்சைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.நோயாளிகளை பார்வையாளர்கள் அதிகளவில் பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X