சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வைரஸ் தடுப்பு நடவடிக்கை: கமிஷனர் ஆய்வு

Added : மார் 25, 2020
Share
Advertisement
 வைரஸ் தடுப்பு நடவடிக்கை: கமிஷனர் ஆய்வு

மெரினா: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், நேற்று சுற்றுலா தலமான மெரினாவில், டேங்கர் லாரி வாயிலாக, கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவற்றை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு தீவிரம்
மயிலாப்பூர்: தமிழக அரசின் உத்தரவுப்படி மார்ச், 1ம் தேதி முதல், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை, கணக்கெடுக்கும் பணி நடந்தது. அதில் மயிலாப்பூரில், 46 பேர் பட்டினப்பாக்கத்தில், 32 பேர் என, அந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என கண்டறியப்பட்டது.இது தவிர பட்டினப்பாக்கத்தில் உள்ள, நட்சத்திர விடுதியில், 18 பேர் தங்கி சென்றுள்ளனர்.இவர்கள் அனைவரிடமும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு, எங்கெங்கு சென்றார்கள், யாரை சந்தித்தார்கள் போன்ற விபரங்கள் கேட்டறிந்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
எச்சரிக்கை, 'நோட்டீஸ்'
ராயபுரம்: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட, 15 மண்டலங்களில், 3,682 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின், 436 வீடுகளிலும், 'ஸ்டிக்கர்' ஒட்டும் பணியை, சுகாதார ஆய்வாளர்கள் நேற்று மேற்கொண்டனர். அதில், 'கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு' உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. ராயபுரத்தில், 305 வீடுகளிலும், தண்டையார்பேட்டையில், 131 வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
வீட்டிற்குள் நுழைய தடை
புழல்: புழல் அடுத்த செகரட்டரியேட் காலனியில் உள்ள, சில வீடுகளில், வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் வரவேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.தங்களின் சுய பாதுகாப்பை கருதி, கொரோனா வைரஸ் சங்கிலி தொடரை உடைக்கும் விதமாக, அந்த அறிவிப்பு பலகையை வைத்துள்ளதாக, அங்கு வசிப்பவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X