பொது செய்தி

தமிழ்நாடு

முறைகேடாக, 'சானிடைசர்' விற்பவர் குறித்த தகவல் தெரிவித்தால் சன்மானம்

Added : மார் 25, 2020
Share
Advertisement

செம்பாக்கம்:முக கவசம், கிருமி நாசினி, கையுறை ஆகியவற்றை, அதிக விலைக்கு விற்போர் குறித்து, தகவல் அளிப்போருக்கு, சன்மானம் வழங்கப்படும் என, செம்பாக்கம் நகராட்சி அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, முக கவசம் அணியுங்கள்; சோப்பு மற்றும் கிருமி நாசினி வாயிலாக, அடிக்கடி கைகளை கழுவுங்கள் என, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, திடீரென தேவை அதிகரித்துள்ளதால், முக கவசம், கிருமி நாசினிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள, மருந்து கடைகளில், முக கவசம், கிருமி நாசினி, கையுறை உள்ளிட்ட பொருட்கள், அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

புறநகர் பகுதிகளில், முக கவசம் மற்றும் கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், கண்காணித்து வருகின்றனர்.

இதன்படி, செம்பாக்கம் நகராட்சிப் பகுதிகளில், கிருமி நாசினி, முக கவசம், கையுறை ஆகியவற்றை அதிக விலைக்கு விற்போர் குறித்து, 99529- 49362 என்ற எண்ணில், பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.புகார் உண்மையாக இருப்பின், சம்பந்தப்பட்ட கடைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்போருக்கு, தலா, 1,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X