பொது செய்தி

தமிழ்நாடு

லண்டனில் இருந்து வந்த தம்பதியுடன் 14 பேர் வீட்டில் தனிமைப்படுத்தல்

Added : மார் 25, 2020
Share
Advertisement
லண்டனில் இருந்து வந்த தம்பதியுடன் 14 பேர் வீட்டில் தனிமைப்படுத்தல்

கமுதி கமுதி அருகே மார்ச் 21ல் லண்டனில் இருந்து வந்த தம்பதி உட்பட 14 பேர் வீட்டு பாதுகாப்பில் சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர்.கமுதி அருகே கோட்டையூரை சேர்ந்த இளம் தம்பதியர் 5 வயது மகனுடன் மார்ச் 20ல் லண்டனில் இருந்து சொந்த ஊரான கோட்டையூருக்கு திரும்பினர். வெளிநாட்டில் இருந்து வந்த தம்பதியரை, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ரவி, ரஜேந்திரன் (கிராம ஊராட்சிகள்) தலைமையிலான சுகாதாரத் துறையினர் அடங்கிய குழுவினர் விசாரித்தனர்.பின், அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறாத வண்ணம், வீட்டு சுவரில் நோட்டீஸ் ஒட்டி, தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடு, என நோட்டீஸ் ஒட்டினர்.இதேபோல் சிங்கப்பூரில் இருந்து எறுமைகுளம், அச்சங்குளம், சடையனேந்தல், கீழக்காக்காகுளம் வந்தவர்களும், மலேசியாவில் இருந்து வந்த கீழக்காக்காகுளம், பேரையூர் கள்ளிக்குளம் வந்தவர்கள், துபாய் நாட்டில் இருந்து வந்த அபிராமம் நத்தம், ஆர்.சோடனேந்தல், தோஹா நாட்டிலிருந்து வந்த கோட்டைமேட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர், லண்டனில் இருந்து வந்த தம்பதியர் 3 பேர் என 12 பேர் வீட்டு பாதுகாப்பில் வைக்கபட்டுள்ளனர்.மேலும் கேரளாவில் இருந்து வந்த தோப்படைபட்டியை சேர்ந்த இளைஞர், கே.வேப்பங்குளத்தை சேர்ந்த இளைஞர் என 14 பேர் வீட்டு பாதுகாப்பில் சுகாதாரதுறையினர் கண்காணிப்பில் உள்ளனர். தென் மாவட்டங்களில் பரவும் கொரோனா வைரசால், அரசுத் துறை மட்டுமின்றி, பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.இருந்த போதிலும் கொரோனாவை ஒழிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில், வட்டார மருத்துவ குழுவில் இடம் பெற்ற வட்டார மருத்துவ அதிகாரி வினோதினி பங்கேற்காதது குறித்து அதிகாரிகள் கவலையடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X