சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு

Added : மார் 25, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் நேற்று மாலை 6:00 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால்மக்கள் அச்சத்தில் உள்ளனர். நம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமாலை 6:00 மணி முதல் ஏப்.1 வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கலெக்டர்வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:அரசு, தனியார் பஸ்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.அத்தியாவசிய பணிகளுக்காக இயக்கப்படும்வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது.உணவுப்பொருட்கள் சம்பந்தப்பட்ட வாகனங்கள், அத்தியாவசிய உணவுப்பொருட்கள், பால், பழங்கள், காஸ்சிலிண்டர் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.உணவுப்பொருட்கள் சம்பந்தப்பட்ட கடைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறந்திருக்கும்.மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்படும்.அரசு அலுவலகங்களில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை,குடிநீர் வழங்கல், நகராட்சி, துப்புரவு, ஊரகவளர்ச்சித்துறை, மருத்துவமனைகள் உட்படஅத்தியாவசியமான துறைகள் மட்டுமே குறைந்த பணியாளர்களுடன் செயல்படும். மாவட்ட எல்லைகள்அனைத்தும் மூடப்படும். மக்கள் வீடுகளில் தங்கியிருக்கவேண்டும். வெளியில் நடமாடக்கூடாது. ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இடைவெளியை கடை பிடிக்க வேண்டும்.ஏப். 1 முதல் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்பவர்கள் வந்த நாளில் இருந்து 28 நாட்கள் வீடுகளில் தங்கியிருக்கவேண்டும். பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடியிருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X