பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு சென்று வந்தோரை பீதியுடன் பார்க்கும் மக்கள்

Added : மார் 25, 2020
Share
Advertisement

மதுரவாயல்:வெளிநாடுகளில் இருந்து வரும் குடிமக்கள், கொரோனா அறிகுறி இல்லை என்றாலும், தங்களை, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரவாயலைச் சேர்ந்த முதிய தம்பதி, சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பினர். இவர்கள், விமான நிலையத்திலேயே, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பல மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின், நோய் தொற்று இல்லை என, உறுதி செய்யப்பட்டதும், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், சுகாதார துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், சுகாதார துறை அமைச்சருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த தம்பதி வீட்டிற்கு, அரசு வாகனங்களில் சுகாதார துறை அதிகாரிகள் படையெடுத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, மக்கள் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை.
இந்நிலையில், அந்த தம்பதிக்கு, கடைகளில் பொருட்கள் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.இதனால், அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் வந்தபோது, நம்மை ஒன்றிணைத்த மனிதம், தற்போது சாகடிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X