பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார பணியாளர்களுக்கு தனி பேருந்து வசதி ஏற்பாடு

Added : மார் 25, 2020
Share
Advertisement

சென்னை:சென்னை மாநகராட்சியில், வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும், மலேரியா, துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களை, வீட்டில் இருந்து அழைத்து வர, சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால், தமிழகத்தில், 144 உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால், பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து, முழுவதுமாக தடை செய்யப்பட்டு உள்ளது.வைரஸ் தடுப்பு பணியில், சென்னை மாநகராட்சி ஊழியர்களின் பங்கு அதிகம். இதை கருத்தில் வைத்து, அனைத்து கள ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.துாய்மை, சுகாதாரம், சாலை, தெருவிளக்கு போன்ற பணிகளில், கடைநிலை ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், பஸ், ரயிலில் பயணித்து, பணிக்கு செல்கின்றனர்.போக்குவரத்து தடைபட்டதால், இவர்கள் பணிக்கு வர இயலாத சூழல் ஏற்படும். இதனால், குறிப்பிட்ட பகுதியில் இருந்து மாநகர பேருந்து வசதி செய்ய, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வைரஸ் தடுப்பு நடிவடிக்கைக்கு, மலேரியா, துப்புரவு ஊழியர்களின் பங்கு அதிகம். ஐ.டி., ஊழியர்களை அழைத்து வருவது போல், இவர்களையும், அவர்கள் வீட்டின் அருகில் இருந்து, பேருந்தில் அழைத்து வர உள்ளோம். ஊழியர்கள் முகவரி சேகரிக்கப்படுகிறது. எந்தெந்த பகுதியில் இருந்து வருகின்றனரோ, அதை கணக்கிட்டு, முக்கிய இடங்களில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படும். காலை அழைத்து வந்து, மாலை ஏறிய இடத்தில் இறக்கி விடப்படுவர். காலை, மதியம், 'அம்மா' உணவகத்தில், அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X