பொது செய்தி

தமிழ்நாடு

முடியட்டும் கொரோனாவின் 'ஆட்டம்' விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு 'லீவு'

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை;கோவை, நேரு ஸ்டேடியத்தில் அமைந்துள்ள விளையாட்டு விடுதி மாணவர்கள், பெற்றோருடன் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், மாணவர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்தவும், சர்வதேச அளவில் சாதனைகள் படைக்கவும், விளையாட்டு விடுதிகள் அமைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.கோவை விளையாட்டு விடுதியில், 60 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். 'கொரோனா' வைரஸ் பீதி காரணமாக, விளையாட்டு போட்டிகளும், பயிற்சி முகாம்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நோய் தொற்று, விளையாட்டு விடுதி மாணவர்களை தாக்காமல் இருக்க, பெற்றோரை வரவழைத்து, பாதுகாப்புடன் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''கோவை மாவட்ட விளையாட்டு விடுதியில், 60 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ராம்நகர் சபர்பன் பள்ளியில் படிக்கின்றனர்.தமிழக அரசு அறிவித்தபடி, 6, 7, 8, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டது. பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாலும், பிளஸ் 2 தேர்வு முடிந்ததாலும், அனைவரும் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X