தமிழ்நாடு

வழங்கல்! மாநகராட்சி ஊழியர்களுக்கு அவசரகால அட்டை....எளிதில் அடையாளம் காண வசதி

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வழங்கல்! மாநகராட்சி ஊழியர்களுக்கு அவசரகால அட்டை....எளிதில் அடையாளம் காண வசதி

சென்னை:பொதுமக்கள் மற்றும் போலீசார் எளிதில் அடையாளம் காணும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, அவசரகால அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில், 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. சென்னையில், வைரஸ் பரவலை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல், 144 அமல்படுத்தப்பட்டதால், ஐந்து பேருக்கு மேல் கூட்டமாக நிற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி மற்றும் இதர துறை ஊழியர்கள், வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர். இவர்களை அடையாளம் காணும் வகையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, அவசரகால அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், வைரஸ் தடுப்பு ஊழியர்களை, எளிதில் அடையாளம் காண முடியும். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு செல்லும் போது ஏற்படும், தேவையில்லாத பிரச்னைகள் தவிர்க்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-மார்-202010:04:54 IST Report Abuse
அசோக்ராஜ் தமிழ் செம்மொழி அப்படின்னு சொன்னாங்களே ... ஆங்கிலம் அளவுக்கு இன்னும் வளரவில்லையா? அடையாள அட்டையில் தமிழ் காணோம். தமிழில் போர்டு வைக்க சொல்லி சிறு வியாபாரிகளை மிரட்டுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X