பொது செய்தி

தமிழ்நாடு

மக்களே உஷாரா இருங்க... மயான அறிவிப்பை படிங்க!

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாநகராட்சி மின் மயானங்களில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாடு முழுவதும், கொரோனா விழிப்புணர்வு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக கோவையில் அமைந்துள்ள மயானங்களில், கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலுக்கு வந்துள்ளன.மாநகராட்சி மின் மயான நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தகனம் செய்வதற்காக, மின் மயானம் பதிவு செய்ய வரும்போதே, உறவினர்களுக்கு அறிவுரைகள் கூறி விடுகிறோம். இறந்த 2 மணி நேரத்தில் சடலத்தை, கொண்டு வந்து விட வேண்டும். சடலத்தை குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் தொடக்கூடாது.சடலத்துடன் 10 பேர் மட்டுமே வர வேண்டும். எரியூட்டும் இடத்துக்கு சடலத்தை சுமந்து செல்லும் நால்வர், கொள்ளி வைப்பவர் என, ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி தரப்படும். அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.இறந்தவர் வயதில் இளையவர் என்றால், போலீஸ் மூலம் தான் வர வேண்டும். வயதானவர், குழந்தைகள் வரக்கூடாது. இந்த அறிவுரைகள் ஒரு வாரமாக பின்பற்றப்படுகின்றன.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.மயானத்தில் சடலம் எரியூட்ட வரும் முன்பும், பின்பும் கிருமிநாசினி தெளிக்கப்படுவதாகவும், மயான ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X