சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Added : மார் 25, 2020
Share
Advertisement

மடிப்பாக்கம்:முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை, எழும்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதில், முதல்வர், இ.பி.எஸ்., வீட்டில், வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்க போவதாகவும் கூறி, இணைப்பை துண்டித்தார்.இதையடுத்து, முதல்வர் வீட்டிற்கு விரைந்த, வெடிகுண்டு நிபுணர்கள், 2:00 மணி நேரம் சோதனையிட்டனர். சோதனையில், வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால், அது வெறும் மிரட்டல் என தெரியவந்தது. எழும்பூர் போலீசார் விசாரித்தனர்.
இதில், மடிப்பாக்கம், ராம்நகர், ஒன்பதாவது தெருவைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா, 41, என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.இதையடுத்து, மடிப்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரித்ததில், அளவுக்கதிகமான குடிபோதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.இவர் கடந்தாண்டு, ஜனவரி, கானாத்துாரில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, சிக்கந்தர் பாஷாவை கைது செய்து, எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X