பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி தட்டுப்பாடு வராது மக்களே...கூட்டமாக செல்வதால் விலை கூடுது!

Added : மார் 25, 2020
Share
Advertisement
 காய்கறி தட்டுப்பாடு வராது மக்களே...கூட்டமாக செல்வதால் விலை கூடுது!

பேரூர்,:கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு,144 தடை உத்தரவை பிறப்பித்து, அத்தியாவசிய பொருட்களின் வினியோகம் இருக்கும் என அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, மக்கள் கூடுவதை தவிர்க்கவே எடுக்கப்பட்டது.ஆனால், தடை உத்தரவு வெளியானது முதல், காய்கறி மார்க்கெட், மளிகைக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.இந்த நிலையால், 'கொரோனா' தொற்று ஏற்படவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கவும், நாமே வழி வகுக்கிறோம்.விவசாயிகள் இரவும், பகலுமாக உழைத்து விளைநிலங்களை பசுமையாக்கி உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும், காய்கறி தேவைக்கேற்ப விளைந்துள்ளது.மூன்று மாதங்களுக்கு மேலாகியும், அவற்றின் விலை ஏற்றம் காணாததே அதற்கு சாட்சி. விவசாயிகள் 'கொரோனா' குறித்த எவ்வித அச்சமுமின்றி, நாள்தோறும் அறுவடை செய்கின்றனர்.ஆகவே, காய்கறி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. மக்கள் முட்டி, மோதுவதை தவிர்த்து, 144 தடை உத்தரவை பின்பற்ற வேண்டும். குடும்பத்தாருடன் வீடுகளில் ஓய்வெடுங்கள். இப்படி செய்தால் மட்டுமே, வரும் நாட்கள் நம் சந்ததியினருக்கு வசந்தமாகும். அலட்சியமாக இருந்து, இத்தாலி நாட்டு மக்கள் செய்த பெரும் தவறை, நாமும் செய்திட வேண்டாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X