பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில், 'டோக்கன்' முறை! கூட்டம் கூடுவதை தவிர்க்க புதிய திட்டம்

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை;கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில், அதிகாரிகள் அனைவரும் ஈடுபட்டுள்ளதால், அறிவித்தபடி, ஏப்.,1ம் தேதி 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்' நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.தொழில், பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறும் கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், பிற பணியாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முகவரியை மாற்றி கொள்ள வேண்டிய நிலை உள்ளது.இதற்காக, 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. ஜூன் இறுதிக்குள் அனைத்து மாநிலங்களிலும், இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.முதல்கட்டமாக, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த, பிப்.,1ம் தேதி முதல் அமல்படுத்தியது.கோவை மாவட்டத்தில், 1,419 ரேஷன் கடைகள் மூலம், 9 லட்சம் அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது, 144 தடை உத்தரவு அறிவித்துள்ள நிலையில், உணவு பொருட்கள் வினியோகத்தில், தட்டுப்பாடு எழாத வண்ணம் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு தாராளமாக இருக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.தற்போது, முதல்வர் அறிவித்துள்ள, 1,000 ரூபாய் வினியோகம் காரணமாக, மாவட்ட வழங்கல் துறைக்கு கடும் பணிச்சுமை எழுந்துள்ளது.மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொரோனா பாதிப்புக்கு முன், இத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக, என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. தற்போது முழுமையாக கொரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்வதால் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை சார்ந்த பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மேலிடத்தில் இருந்து வரும் தகவல்களை கட்டாயம் பின்பற்று வோம்' என்றார்.ரேஷன் கடைகளில் கூட்டம்தவிர்க்க 'டோக்கன்' முறை!ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயம் முககவசம் போட்டு மட்டுமே பணிபுரிய வேண்டும், அடிக்கடி கைகளை கிருமிநாசினி பயன்படுத்தி கழுவ வேண்டும், ரேஷன் பொருட்கள் வாங்க அதிகபட்சம் பத்து பேர் மட்டுமே குறிப்பிட்ட இடைவெளி விட்டு நின்று, வாங்க வேண்டும். அதற்கு மேல் கூட்டம் இருந்தால், டோக்கன் கொடுத்து, குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வரவழைக்கப்படுவர். அரசு அறிவித்த பணமாக இருந்தாலும், ரேஷன் பொருட்களாக இருந்தாலும் அனைவருக்கும் கட்டாயம் கிடைக்கும். சுயகட்டுப்பாட்டுடன் கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என, அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X