பொது செய்தி

தமிழ்நாடு

உற்பத்தி கூட்டியாச்சு... பதறியடிச்சு வராதீங்க! ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை:'அத்தியாவசிய பொருளான பால், தட்டுப்பாடின்றி அனைத்து பகுதிகளிலும், கிடைக்கும் வகையில், வழக்கமான உற்பத்தியை விட, இரு மடங்கு உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்படும்' என, ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருளான பால் தட்டுப்பாடின்றி வினியோகிக்கப்படும், என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) தலைவர் ராஜு, பொதுமேலாளர் ரவிக்குமார் கூறியதாவது:கோவை ஆவினில், தினமும் 1.50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், வினியோகஸ்தர்கள் மூலமும், ஆவின் பாலகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாலுக்காக மக்கள் சிரமப்படுவதை தவிர்க்க, ஆவினில் வழக்கத்தை விட, இரு மடங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.அனைத்து பகுதிகளிலும், கூடுதல் பால் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமும் பால் வினியோகம் இருக்கும் என்பதால், மக்கள் ஒட்டு மொத்தமாக இருப்பு வைத்துக்கொள்ள அவசியம் இல்லை. பால் வாங்க வருவோர் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில், கூட்டம் கூட்டமாக சேர்வதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பால் வரவில்லையா? அழையுங்கள்மாவட்டத்தில், ஆவின் பால் வினியோகம் தடைபட்டாலோ அல்லது கிடைக்கவில்லை என்றாலோ, கிழக்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் 94890 43713, மேற்கு மண்டலம் - 94890 43711, வடக்கு மண்டலம் - 98422 44750, தெற்கு மண்டலம் - 96774 94172 மற்றும் ஆவின் விற்பனை பிரிவு மேலாளரை, 94890 43715 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு, தங்கள் தேவைக்கான பால் பாக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X