பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டை விட்டு வெளியே வராதீங்க பேரூராட்சிகளில் மைக்கில் அறிவிப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறித்து, ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவித்தனர்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் சார்பில்,கொரோனா பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், நேற்று மாலை, 6:00 மணி முதல் மார்ச் 31 வரை, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தொண்டாமுத்துார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.'144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். அரசின் நடவடிக்கைக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு இருக்க வேண்டும்' என அறிவிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X