பொது செய்தி

தமிழ்நாடு

கோடை விடுமுறையில் கவுன்சிலிங்: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை;பள்ளி துவங்கும் முன்பே, கவுன்சிலிங் நடத்தி, பதவி உயர்வு, பணியிட மாறுதல் உத்தரவுகளை, பிறப்பிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பள்ளிக்கல்வித்துறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, மே மாதம் நடத்த வேண்டுமென்ற விதிமுறை உள்ளது.ஆனால், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுதல், 25 சதவீத இடதுக்கீடு மற்றும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் இருப்பதால், கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்படுகிறது.ஆகஸ்ட் மாதம் வரை, புதிய பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் வழங்கும் பணிகள் நடக்கின்றன. வெளி மாவட்டங்களுக்கு பணிநிரவல் பெறுவோர், பெரிதும் சிரமப்படுகின்றனர்.எமிஸ் இணையதள விவரங்கள் அடிப்படையில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கலந்தாய்வு பணிகள் துவங்க வேண்டும்.இரண்டாம் கட்ட கலந்தாய்வு, புதிய மாணவர் சேர்க்கைக்குப் பின், உடனே நடத்த வேண்டுமென, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.23 தலைமையாசிரியர்கள்36 பி.ஜி., ஆசிரியர்கள் ஓய்வுஅரசுப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், 'நடப்பு கல்வியாண்டுடன், 23 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 36 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிறைவு பெறுகின்றனர். இதேபோல், ஒவ்வொரு நிலையிலும் பணி ஓய்வு பெறுவோர் பட்டியல் அதிகரித்துள்ளது. இந்த இடங்களை நிரப்பாமல், கல்விப்பணிகளை துவக்கினால், நிர்வாகம், கற்பித்தல் பணிகளுக்கு சிக்கல் ஏற்படும். எனவே, கோடை விடுமுறையிலே, கலந்தாய்வு நடத்தினால், பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X