பொது செய்தி

தமிழ்நாடு

வேலை இழந்த கட்டட தொழிலாளர்கள் அரசு உதவி தொகை வழங்க கோரிக்கை 

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், உள்ள கட்டட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என, ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., மற்றும் எச்.எம்.எஸ்., உள்ளிட்ட சங்கங்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், வேலை இழந்து தவிக்கின்றனர்.உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட, பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, உதவித் தொகையாக தலா, 5000 ரூபாய் வழங்க வேண்டும் என, அனைத்து சங்கத்தினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X