தமிழ்நாடு

நகரில் கைக்குட்டை விற்பனை ஜோர்! 'மாஸ்க்' தட்டுப்பாடு எதிரொலி

Added : மார் 25, 2020
Share
Advertisement
நகரில் கைக்குட்டை விற்பனை ஜோர்! 'மாஸ்க்' தட்டுப்பாடு எதிரொலி

திண்டுக்கல் : கொரோனா தொற்றுநோய், தடுப்புக்கவசம் மாஸ்க் கிடைப்பது அரியாகியுள்ளது. அதற்குபதிலாக மக்கள் கைக்குட்டை(கர்சிப்) பயன்படுத்துவதால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவிவருகிறது. இதனைக்கட்டுப்படுத்த அனைவரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். முகத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்லில் கொரோனா ஒழிப்பு கிருமிநாசினி மருந்துதெளிப்பு, விழிப்புணர்வு பணிகள், மருத்துப் பணியாளர்கள் மாஸ்க் அணிந்து பணிபுரிகின்றனர். அவை கடைகளில் கிடைப்பது அரிதாகியுள்ளது.மகளிர் உதவிக்குழுவினர் மூலம் குறைந்த விலையில் ரூ.10க்கு விற்கின்றனர். அங்கு குறைந்த பணியாளர்களே உள்ளதால் பொதுமக்களுக்கு குறித்தநேரத்தில் வழங்க முடியவில்லை.

ஆர்டர் செய்த 3 நாட்களுக்கு பிறகுதான் மாஸ்க் கிடைக்கிறது.கடைகளில் மாஸ்க் ஒன்று ரூ.25 முதல் ரூ.40 வரை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மக்கள் தங்களை பாதுகாக்க கைக்குட்டையை மாஸ்க்'காக பயன்படுத்துகின்றனர். அதன் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறினர். கைகுட்டை ஒன்றின் விலை ரூ.25 வரை விற்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X