பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகை குறைவு

Added : மார் 25, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக, அவசர சிகிச்சை மட்டும் அளிக்கப்படுவதால் வெளிநோயாளிகளின் வருகை குறைந்துள்ளது.

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 3ஆயிரம் உள், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்க்க டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் கைகளை கிருமிநாசினி மருந்து தெளித்து கழுவியும், முகத்தில் மாஸ்க் அணிந்தும் பணிபுரிகின்றனர்.144 தடை உத்தரவு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுடன் உறவினர் ஒருவர் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

நுழைவுப்பகுதிகள் பூட்டப்பட்டு அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 'மருத்துவமனை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளியிடங்களுக்கு கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும்' என டாக்டர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X