சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தி காட்டி மிரட்டல்; எட்டு பேர் கைது

Added : மார் 25, 2020
Share
Advertisement

போத்தனுார்:போத்தனூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், மூவர் காயமடைந்தனர். தி.மு.க., நிர்வாகி உட்பட எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.போத்தனூர் அருகே காந்திஜி ரோட்டில், பழைய உழவர்சந்தை உள்ளது. இதனருகே உள்ள காலியிடத்தில், நேற்று முன் தினம் இரவு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின், சாகா பயிற்சி நடந்தது.அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அங்கு வசிக்கும் மாவு வினியோகம் செய்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.கைகலப்பு ஏற்பட்டது. அக்கும்பலில் இருந்த சிலர், கத்தியால் குத்த முயன்றனர். இருவருக்கு காயமேற்பட்டது. இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள், தப்பியோட முயன்றவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் ஒருவருக்கு காயமேற்பட்டது.அங்கு சென்ற போத்தனூர் போலீசார், அக்கும்பலை வளைத்து பிடித்தனர். காயமடைந்த போத்தனூரை சேர்ந்த அஜீஸ்,15 மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விசாரணையில், உடனிருந்தவர்கள் உக்கடத்தை சேர்ந்த சாகித் அலி, போத்தனூரை சேர்ந்த கதிரேசன், மதன்குமார், முகமது இஸ்மாயில், நசீர்பாஷா, அப்பாஸ் என தெரிந்தது.அவர்களிடமிருந்து நான்கு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், அதே பகுதியை சேர்ந்த, மாவட்ட தி.மு.க., பிரதிநிதி நிசார், 55 என்பவரும் கைது செய்யப்பட்டார்.அனைவரும் மாஜிஸ்திரேட் முன், ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X