பொது செய்தி

தமிழ்நாடு

விமான நிலைய ஊழியர்கள் 'அலர்ட்' ஆக இருக்க அறிவுறுத்தல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை: கோவை விமானநிலைய ஊழியர்கள், வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர். அவசர அழைப்புக்கு தயார்நிலையில் இருக்க, ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் கோவை விமான நிலையம், கொரோனா வைரஸ் அச்சத்தால் வெறிச்சோடியது.உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.விமானநிலைய பாதுகாப்பு பணியில் உள்ள, மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் சிலர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துாய்மை பணியாளர்கள் விமான நிலைய பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலைய ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டாலும், 'எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்; வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். அவசர கால அழைப்பு வந்தால் உடனடியாக பணிக்கு வரவேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X