புலியகுளத்தில் கொசு உற்பத்தி; யாருக்கும் கவலையில்லை இது பற்றி!

Added : மார் 25, 2020
Share
Advertisement

வீடுகள் முன் சாக்கடை குளம்மாநகராட்சி, 94வது வார்டுக்கு உட்பட்ட, மாச்சம்பாளையம் திருநகரில், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட குழியால், ஏற்கனவே உள்ள சாக்கடை கால்வாய் அடைபட்டு, கழிவுநீர் வீடுகள் முன் குளம் போல் தேங்கியுள்ளது.- சாபுதீன், திருநகர்.

சுகாதார சீர்கேடுமாநகராட்சி, 54வது வார்டுக்கு உட்பட்ட, வரதராஜபுரம் மேடு, குட்டி நாயக்கர் லே-அவுட், ராஜிவ் காந்தி வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தேவராஜ், ராஜிவ் காந்தி வீதி.

நீர்நிலையில் ஆக்கிரமிப்புசரவணம்பட்டி, வண்ணான்குட்டையில், மரங்கள் வெட்டப்பட்டு, நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளது.- ரமேஷ், சரவணம்பட்டி.

சாலை ஆக்கிரமிப்புமருதமலை ரோடு, வடவள்ளி காளிதாஸ் தியேட்டர் அருகில், சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக செயல்படும், சாலையோர கடைகளை அகற்ற வேண்டும்.- சண்முகம், வடவள்ளி.

போர்வெல் நீர் வருவதில்லைமாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1, 'டி' பிளாக்கில் உள்ள, பொதுக்குழாயில் ஏற்பட்ட அடைப்பால், போர்வெல் தண்ணீர் வருவதில்லை; தட்டுப்பாடு நிலவுகிறது.- நந்தினி, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1

கழிவுநீர் குடிநீரில் கலக்கும் அபாயம்கணபதி, சின்னவேடம்பட்டி, கோபாலகிருஷ்ணா மில் கார்னரில், குடிநீர் குழாய் சாக்கடை நீரால் சூழப்பட்டுள்ளது. கழிவுநீர் குழாய்க்கும் சென்று, குடிநீரில் கலக்கும் அபாயம் உள்ளது.- ஆதவன், பாரதி நகர்.

சிலாப் அமைக்கணும்ராஜவீதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக நுழைவாயில், நடைபாதை சிலாப் உடைந்துள்ளது. இவ்வழியே வருவோர், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.- குமார், சுக்கிரவார்பேட்டை.

குழாய் உடைப்பால், குடிநீர் வீண்கணபதி, லட்சுமிபுரம், டெக்ஸ்டூல் பாலம் - ரத்தினபுரி ரோடு, விஸ்வநாதபுரம் சந்திப்பில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- அழகியண்ணன்,

விஸ்வநாதபுரம்.

பொதுக் கிணறை சுத்தம் செய்யணும்போத்தனுார் - வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகில் உள்ள, பொது கிணற்றில் குப்பை கொட்டப்படுகிறது.- சண்முகசுந்தரம்,

பஸ் ஸ்டாண்டுக்குள் நிற்க முடியலதடாகம் ரோடு, கணுவாய் பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள சாக்கடை கால்வாயில் குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது; துர்நாற்றம் வீசுகிறது.- இளங்கோ, கணுவாய்.

ரோட்டில் குழி; விபத்துக்கு வழிசிங்காநல்லுார் - வெள்ளலுார் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் இடத்தில், சாலையில் உள்ள பெரிய குழியால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இக்குழியை மூட வேண்டும்.- சந்திரன், சிங்காநல்லுார்.

மூன்று சக்கர வாகனங்களால் தொல்லைசெட்டிவீதியில் உள்ள பஸ் ஸ்டாப்பை ஒட்டி ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.- வெங்கிடுசாமி, செட்டிவீதி.

நடக்க வழியில்லைதிருச்சி ரோடு, ராமநாதபுரம், பெட்ரோல் பங்க் அருகில் பஸ் ஸ்டாப்பை ஒட்டியுள்ள, நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.- ரவி, ராமநாதபுரம்.

கோவில் முன் அசுத்தம்மாநகராட்சி, 76வது வார்டுக்கு உட்பட்ட, சிதம்பரம் காலனி, விநாயகர் கோவில் எதிரில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது.- பாலாஜி, சிதம்பரம் காலனி.

சாக்கடை கால்வாயை துார் வாரணும்மாநகராட்சி, 70வது வார்டுக்கு உட்பட்ட, புலியகுளம், பாலசுப்ரமணியம் நகரில் சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் உள்ளது. குப்பைகள் நிரம்பி கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது; கொசு உற்பத்தியாகிறது.- விவேக்குமார், பாலசுப்ரமணியம் நகர்.

குப்பை தொட்டி வைக்கணும்மாநகராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட, பியூன்ஸ் காலனி, ஐந்தாவது வீதியில், தொகுப்பு வீடுகளுக்கு முன், குப்பை தொட்டி இல்லாததால், சாலையில் கொட்டப்படுகிறது.- மதுபாலா, பியூன்ஸ் காலனி.

குப்பை அள்ளுவதில்லைகணபதி, கணபதி புதுார், ஐந்தாவது வீதியில், குவிந்துள்ள குப்பை, வாரக்கணக்கில் அள்ளப்படாமல் குவிந்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராஜன், கணபதி.

குப்பை மலைகணபதி, போலீஸ் குடியிருப்பு பகுதியில், சாலையோரம், மலைபோல் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும்.- கலைவாணன், போலீஸ் குடியிருப்பு.

தொட்டி நிறைய குப்பைஒண்டிப்புதுார் - சிங்காநல்லுார் செல்லும் ரோட்டில் வசந்தா நகர் அருகே உள்ள, ஆர்.கே.கே.நகரில், குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இக்குப்பையை அகற்ற வேண்டும்.- மீனாட்சிகுமார், ஆர்.கே.கே.நகர்.

பள்ளி செல்லும் ரோட்டில் சங்கடம்வீரகேரளத்தில் உள்ள அரசு பள்ளி செல்லும் ரோட்டில், சாலையோரம் குவிந்துள்ள குப்பை, மாதக்கணக்கில் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. குழந்தைகள் நோய் தொற்றுக்குள்ளாகின்றனர்.- சங்கர், வீரகேரளம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X