பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவு அமல்

Added : மார் 25, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஏப்.1 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனாவால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க, மக்கள் மார்ச் 22 ஒரு நாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று (மார்ச் 25) மாலை 6:00 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்படுகிறது.

இந்த உத்தரவின் படி பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட்டமாக சேர்ந்திருக்க கூடாது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் போன்ற போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், ரேஷன் உள்ளிட்ட பொருட்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை, மீன், இறைச்சிக் கடைகள், மருந்தகங்கள், பால் மற்றும் ரேசன் கடைகள் செயல்படும். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளது. பார்சல் முறையில் உணவுகள் வழங்கலாம். பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்து நோய் பரவுவதை தடுக்க முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 144 தடை உத்தரவு ஏப்.1 காலை 6:00 மணி வரை அமலில் இருக்கும் என, கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X