பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு நிறைவு: மாணவர்கள் பிரியாவிடை

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை:கோவை மாவட்டத்தில், 365 பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு, 116 மையங்களில் நேற்று பொதுத்தேர்வு நடந்தது.கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், மாணவர்களின் வசதிக்காக, காலை 10:45 மணிக்கு துவங்கிய தேர்வுகள் மதியம், 1:45 மணி வரை நடந்தது.தேர்வு முடிந்ததும் கைகளை குலுக்கி கொண்டும், ஆரத்தழுவியபடியும், நண்பர்களுடன் இணைந்து செல்பி எடுத்தும், தங்களின் அன்பை பகிர்ந்து கொண்டனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இயற்பியல், புவியியல், கணக்கியல் என மூன்று பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன. இத்தேர்வை, 32 ஆயிரத்து 253 பேர் எழுதிய நிலையில், ஆயிரத்து 691 பேர் ஆப்சென்ட் ஆகினர்' என்றனர்.கேசவன் எனும் மாணவர் கூறுகையில், ''கணக்கியல் பாடத்தில், ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் பகுதியில் கடினமான கேள்விகள் இடம்பெற்றன. அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில், வினாத்தாள் இருந்தது. சென்டம் பெறுவது கடினம்,'' என்றார்.மாணவி பிருந்தா கூறுகையில், ''வேதியியல் பாடத்தேர்வுக்கு தயாராக, போதுமான கால அவகாசம் இருந்தது. புதிய பாடத்திட்டம் என்பதால், அனைத்து பகுதிகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை. மூன்று மதிப்பெண் பகுதியில், கடின வினாக்கள் இடம்பெற்றன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X