பொது செய்தி

தமிழ்நாடு

பிள்ளைகளை பிடித்து வையுங்கள்: பெற்றோரே... 'கொரோனா' கவனம்!

Added : மார் 25, 2020
Share
Advertisement

பேரூர்:தமிழக அரசு, பொதுமக்கள் வெளிப்பகுதிகளில் நடமாடுவதற்கு, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்துடன், அனைத்து மாவட்ட எல்லைகளும் மூட உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்றுடன், 12ம் வகுப்பு பொது தேர்வுகளும் முடிந்தன.இதையடுத்து, அனைத்து வித மாணவர்களும் விடுமுறையில் இருக்க போகின்றனர். இவர்களை, மிகுந்த கண்காணிப்பில் வைக்க வேண்டிய முழு பொறுப்பு, பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கு உள்ளது.தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து, பிள்ளைகள் வீடுகளில் இருக்க அறிவுறுத்த வேண்டும். 'வீட்டில் இருக்க போர் அடிக்குது, பிரண்ட் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்' என, டூவீலர்களை கேட்டால், கொடுத்து விடாதீர்கள். பக்கத்தில் உள்ள மளிகைக்கடைக்கு, சிறு சாமான்கள் வாங்கி வர அனுப்பாதீர். அங்கு வைரஸ் தொற்றிக் கொள்ளலாம்.அவசர தேவைக்காக, வெளியே செல்ல வேண்டியிருந்தால் உடன் செல்லுங்கள்; தனித்து விடாதீர்கள். நேற்று, தேர்வு முடிந்தவுடன் கோவை குற்றாலம், பூண்டி கோவில் செல்லும் வழிகளில், பள்ளி சீருடைகளுடன் மாணவர்கள் நடமாடியதை காண முடிந்தது.வீட்டில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் 'டிவி' பார்க்கட்டும்; வீடியோ கேம் விளையாடட்டும், புத்தகம் படிக்கட்டும். துாங்கி, துாங்கி எழட்டும். வெளியே மட்டும் விட்டு விடாதீர்கள்.'கொரோனா' அச்சுறுத்தும் நிலையில், வாரிசுகளை பாதுகாக்க வேண்டியது, பெற்றோரின் பொறுப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X