பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு பணியில் தூய்மையாளர்கள்: சிறப்பூதியத்தை தாண்டி, பணி நிரந்தரம் செய்யுமா அரசு

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை:'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க மும்முரமாக பணியாற்றும், கோவை மாநகராட்சி ஒப்பந்த துாய்மை தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.கோவை மாநகராட்சியில், 4,000க்கும் மேற்பட்ட துாய்மை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், 2,300 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். தினக்கூலி அடிப்படையில், பணிபுரிகின்றனர். கலெக்டர் நிர்ணயித்த சம்பளம், நாளொன்றுக்கு, 400 ரூபாய் என்றாலும், 350 ரூபாயே வழங்கப்படுகிறது. பிடித்தம் போக, ஒவ்வொரு தொழிலாளிக்கும், 9 ஆயிரம் ரூபாய் கிடைப்பதே அரிது.தினமும் காலை, 6:00 மணிக்கு நகரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும், துாய்மை தொழிலாளர்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைப்பதில்லை. கடவுளுக்கு ஈடானவர்கள்; டாக்டர்களுக்கு சமமானவர்கள் என புகழப்பட்டாலும், பணி நிரந்தரம், ஊதியம் வழங்குவதில் மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறது.தற்போது, 'கொரோனா' வைரசை கட்டுப்படுத்தும் பணியிலும்,துாய்மையாளர்கள் ஒவ்வொருவரும் களமிறங்கி, தீவிர பணியாற்றி வருகின்றனர். நகரெங்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மருத்துவ பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என, சட்டசபையில், தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இத்தொகை, செலவினத்தை ஈடுகட்ட உதவும் என்றாலும், பணியை நிரந்தரம் செய்தால், எதிர்காலம் சிறக்கும் என்ற கோரிக்கையை, ஒப்பந்த தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர்.'இதயம் போன்றவர்கள்'மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க, பிரத்யேகமாக அரசுக்கு கடிதம் அனுப்புவோம். அரசாணை வெளியிட்டதும், அவர்கள் நிரந்தரம் செய்யப்படுவர். இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து மேற்கொள்வோம். மாநகராட்சியின் இதயம் போன்றவர்கள் துாய்மை பணியாளர்கள்; அவர்களை விட்டுவிட மாட்டோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X