தமிழ்நாடு

உயிர் வாழ ஆசையிருந்தால் வீட்டுக்குள்ளே இருங்க! அரசு அறிவிப்பை பின்பற்றுங்க!

Updated : மார் 25, 2020 | Added : மார் 25, 2020
Share
Advertisement
கோவை:இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல், முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஆகவே, ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து வெளியேறாமல், அடிக்கடி சோப் போட்டு கழுவியபடி இருந்தால், கொரோனா பாதிப்பில் இருந்து, நாம் ஒவ்வொருவரும் உயிர் தப்ப முடியும்; நம் குடும்பத்தினரையும் காப்பாற்றலாம்.இதை வலியுறுத்தும் விதமாக, 'வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீர்கள்' என, மாநகராட்சி சார்பில்,
உயிர் வாழ ஆசையிருந்தால் வீட்டுக்குள்ளே இருங்க! அரசு அறிவிப்பை பின்பற்றுங்க!

கோவை:இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல், முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஆகவே, ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து வெளியேறாமல், அடிக்கடி சோப் போட்டு கழுவியபடி இருந்தால், கொரோனா பாதிப்பில் இருந்து, நாம் ஒவ்வொருவரும் உயிர் தப்ப முடியும்; நம் குடும்பத்தினரையும் காப்பாற்றலாம்.
இதை வலியுறுத்தும் விதமாக, 'வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீர்கள்' என, மாநகராட்சி சார்பில், கோவை முழுவதும் நேற்று, ஆட்டோக்களில் ஒலிபெருக்கி வாயிலாக பிரசாரம் செய்யப்பட்டது.அதேநேரம், அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த, 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுய ஊரடங்கு அறிவித்தபோது, மாலை, 5:00 மணி வரை, மக்கள் கட்டுப்பாட்டுடன் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர்.கைதட்டி நன்றி சொல்வதற்காக, மாலை, 5:00 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள், கூட்டம் கூட்டமாக நின்று விளையாடியது, பேசிக் கொண்டிருந்தது, வைரஸ் பரவுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.
அது போன்ற ஒரு நிகழ்வு, மீண்டும் வராமல் தடுக்க வேண்டும்.தற்போது சமூக தொற்றாக, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் பரவாமல் கட்டுப்படுத்த, அடுத்த மூன்று வாரங்கள், நாம் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் நம்மை, நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம்.முகம் மற்றும் கைகளை, அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினி மூலம் கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும், அரசின் உத்தரவை பின்பற்றினால் மட்டுமே, தொடர்ந்து உயிர் பிழைப்பது உறுதியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X