பொது செய்தி

தமிழ்நாடு

கோவை கடைகளில் பெரும் கூட்டம்: கொரோனா வைரசை மறந்த சோகம்!

Added : மார் 25, 2020
Share
Advertisement
 கோவை கடைகளில் பெரும் கூட்டம்: கொரோனா வைரசை மறந்த சோகம்!

கோவை:ஊரடங்கு அமல் செய்ததை முன்னிட்டு, நேற்று மளிகை மற்றும் காய்கறி கடைகளில் மக்கள் திரண்டனர். மொத்தமாக பொருட்களை வாங்க நெருக்கியடித்த சூழலில், இதனால் கொரோனா வைரஸ் தொற்றும் என்பதை மறந்து போயினர்.கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசு நேற்று மாலை முதல் ஊரடங்கு அமல் செய்துள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காது என்ற தவறான எண்ணத்தில், மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளை முற்றுகையிட்டனர்.'மார்க்கெட்டில் பெரும் கூட்டம் வரும்; அதற்குள் போவது ஆபத்து அதிகம்' என்று கருதி, மக்கள் பலர், ரோட்டோர திடீர் கடைகளில் காய்கறி வாங்கிச் சென்றனர். டி.கே.மார்க்கெட், மேட்டுப்பாளையம் ரோடு அண்ணா மார்க்கெட் ஆகியவற்றில் நேற்று ஆயிரக்கணக்கான பேர் முண்டியடித்து காய்கறி, பழங்களை வாங்கிச் சென்றனர்.
கொரோனா எச்சரிக்கையை மறந்து, மூச்சு விடக்கூட இடமில்லாத இடங்களிலும் முட்டி மோதி பலரும் செல்வதை, கோவை டி.கே.மார்க்கெட்டில் காண முடிந்தது. நகரின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்களில் செயல்படும் பழக்கடைகள், காய்கறி கடைகளிலும் நேற்று ஏராளமானோர் காய்கறி வாங்கிச் சென்றனர்.அரசு அறிவுறுத்தல் காரணமாக, சூப்பர் மார்க்கெட் காய்கறி கடைகளில், மக்கள் வரிசையில் நின்றனர். எனினும், ஒரு மீட்டர் இடைவெளி விட வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்றி, படித்தவர்கள் கூட நடந்து கொண்டதுதான் பரிதாபம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X