பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ ஊழியர்களுக்கு முதலில் பாதுகாப்பு குடுங்க!

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை:கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, போதிய பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படுவதில்லை. இதனால், பிறருக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, பல பேர் அரசு மருத்துவமனையை கடந்து செல்லக்கூட அச்சப்படுகின்றனர்.
இன்றைய சூழலில், சளி, காய்ச்சல் என்றாலே கொரோனா தொற்று என்றுதான் பலரும் நினைக்கின்றனர்.வீட்டில் பாதுகாப்பாக இருக்கும், சாதாரண பொதுமக்களுக்கே இப்படி பயம் என்றால், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள்.தினமும் பதற்றத்துடன் பணிபுரியும் இவர்களுக்கு, போதிய பாதுகாப்பு சாதனங்கள் கூட முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.இது குறித்து ஊழியர்கள் கூறியதாவது:மருத்துவமனைக்கு நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என தினமும், ஆயிரகணக்கானோர் வந்து செல்கின்றனர்.கொரோனா பீதி இருப்பதால், பதற்றத்துடனே ஒவ்வொருவரையும் அணுக வேண்டியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பலர், எச்சில் துப்புவதும் சுகாதாரமற்ற முறையில் இருமுவதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.மார்ச்சுவரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, முழங்கை அளவுக்கு கையுறை மற்றும் போதுமான அளவு 'சானிட்டைசர்' வழங்க வேண்டும்.
எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தினால்தான், சிகிச்சைக்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஒப்பந்த ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்கள், சம்பந்தப்பட்ட நிறுவனமே வழங்குவதாக உறுதியளித்துள்ளது. சானிட்டைசர் தேவைப்படும் ஊழியர்கள், மருத்துவமனையில் உள்ள ஆர்.எம்.ஓ.,அலுவலகத்தில், லெட்டர் எழுதி கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். தேவை அதிகரித்து வருவதால், உடனுக்குடன் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம், சிலர் ஆதங்கத்தில் புகார் சொல்லி இருக்கலாம்.-சடகோபன்மருத்துவ கண்காணிப்பாளர், அரசு மருத்துவமனை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X