பொது செய்தி

தமிழ்நாடு

வரி, வட்டி செலுத்த ஆறு மாத அவகாசம்: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கோரிக்கை

Added : மார் 25, 2020
Share
Advertisement

கோவை:தங்கள் நிறுவனம் சார்ந்த வரி, வட்டி, இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட அனைத்தும் செலுத்துவதற்கு, ஆறு மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என, கோவை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.எம்.இ., நிறுவன உரிமையாளர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.கோவை மாவட்டத்தில், 50 ஆயிரம் சிறு, குறு, நடுத்த தொழில்நிறுவனங்கள் மூலம், 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
144 தடையுத்தரவால் இவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.இதுகுறித்து, கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:தமிழக அரசை பொறுத்தவரையில், வர்த்தக நிறுவனங்கள் அடைக்க கூறப்பட்ட போதிலும், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில், 50 சதவீத ஆட்குறைப்பு செய்ய மட்டுமே கூறினர்.ஆனால், முழுமையாக அடைத்து ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.
பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள இச்சூழலில், இ.எஸ்.ஐ., பி.எப்., ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வரி, வங்கிக்கடன் சார்ந்த வட்டி உள்ளிட்டவற்றை செலுத்த, ஆறு மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். கடந்த மாத மின் கட்டணம் செலுத்த, இரண்டு மாத அவகாசம் அளிக்க வேண்டும். தற்போதைய சூழல் சரியாக, ஜூன் முதல் வாரமாகிவிடும் என்பதால், இக்கோரிக்கையை வைத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.கோவையிலுள்ள, 16 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சேர்ந்த அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X